தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய வேண்டும் என பலரும் வலியுறுத்த துவங்கி விட்டனர்.
இன்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன், ஜெ.,மரணத்தில் தனிபட்ட முறையில் எனக்கே சந்தேகங்கள் இருக்கிறது.
இந்த வழக்கை தொடர்ந்து நானே விசாரித்தால், ஜெ.,உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனை செய்ய உத்தரவிடுவேன் என காட்டமாக கூறினார்.
அதே போன்று அ.தி.மு.க.,விசுவாசியாக இருந்த கராத்தே ஹூசைனியும் ஜெ.,கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறியுள்ளார்.
பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ், தி.மு.க.,பொருளாளர் ஸ்டாலின் உட்பட கட்சியினர் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்திலுள்ள ஒட்டு மொத்த மக்களும் அதை தான் விரும்புகின்றனர். இது தொடர்பான வழக்கு விசாரணை, ஜனவரி 9ம் தேதி வரவுள்ளது.
அன்றைய தினம் நீதிபதிகள் தீர்ப்பை பொருத்து, ஜெ.,உடல் தோண்டி எடுக்கப்பட்டு, பரிசோதனை நடத்தப்படலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
அப்படி நடந்தால், சசிகலா மற்றும் அப்போலோ ரெட்டி ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டு சிறை செல்வது உறுதி என கூறப்படுகிறது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.