Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 20, 2016

ஜெயலலிதா சாவில் மர்மம் ‘வீடியோ’ பதிவை வெளியிடக்கோரி குடும்ப நண்பர் கீதா எழும்பூர் கோர்ட்டில் வழக்கு


 உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா கடந்த 5 &ந்தேதி உயிரிழந்தார்.
மெரினா கடற்கரையில்  அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர் பாக கோர்ட்டுகளிலும் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. அரசியல் பிரமுகர்கள் பலரும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகளை கூறி வருகிறார் கள்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் குடும்ப நண்பரான வக்கீல் கீதா எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்ப தாகவும், அதனை வெளிக் கொண்டு வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக கோர்ட்டு வளாகத்தில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜெயலலிதாவின் உடல் நிலை தொடர்பாக எழுந்துள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும். இதற்காக போயஸ் கார்டன் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள வீடியோ பதிவுகளை வெளியிட வேண்டும். அப்போதுதான் உண்மை வெளிவரும். இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்ய வேண்டும்.  இவ்வாறு அவர் கூறினார்.  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.