
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக-வை விட்டு பிரிந்த பிரபல தற்காப்புக் கலை கலைஞரான ஹுசைனி ‘அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு’ என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து சில தினங்களே ஆயிருப்பினும் அதிமுக கட்சியில் பல பிரச்சனைகளும் வதந்திகளும் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்று மூத்த நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சில அதிமுகவினர் கட்சியை விட்டு விலகி தனிக் கட்சி ஆரம்பித்து வருகின்றனர்.
மேலும், சில அதிமுகவினர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரித்து போஸ்டர்களும், பேனர்களும் வைக்கின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற காலத்தில் அவர் விடுதலையாக வேண்டுமென்று தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொள்ளும் நிகழ்ச்சியை நடத்திய தற்காப்புக் கலை கலைஞரான ஹுசைனி தற்போது அம்மா(அம்மா மக்கள் முன்னேற்ற அமைப்பு)என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவை சந்தித்த பின்னர், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து ஹூசைனி கூறியதாவது, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுக கட்சியில் மோசமான அரசியல் நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
எனவே அதனை மாற்றும் வகையில் அரசியலில் குதிக்கும் முடிவை எடுத்துள்ளேன். என்றுமே ஜெயலலிதாவின் ரசிகன்,விசுவாசியாகவும் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.