Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 20, 2016

ஜெ… மறைவை ரகசியமாக கொண்டாடிய..! திரையுலகின் ஒரு பிரிவு..! என்ன சொல்றது..படிங்க..!


 
ஜெ. மறைவை ரகசியமாக கொண்டாடிய திரையுலகின் ஒரு பிரிவு..!
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இருக்கும் வரை தான் தமிழ் திரையுலகின் பொற்காலம். அவரும் திரைப்படத்துறையில் இருந்து முதல்வரானதால்.. தனது தாய்வீட்டின் மீது தீராத பாசம் வைத்திருந்தார்.
அடுத்து கலைஞரும், ஜெ.வும் ஆட்சிக்கு வந்த போது வாரிசுகள் தொலைக்காட்சி சேனல்கள் ஆரம்பித்தனர். திரைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தனர்.
தியேட்டர்களை மிரட்டி தங்களது திரைப்படங்களை அதில் ரிலீஸ் செய்து மொத்த வசூலையும் பார்த்தனர். சூப்பர்ஹிட் திரைப்படங்களை தங்களது சேனலுக்கு தர வேண்டும் என்று மிரட்டினர். பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடத்தி ஹீரோ -ஹீரோயின்களை மிரட்டி வைத்தனர்.
ஜெ. இன்னும் ஒருபடி மேலே போனார். தனக்கு எதிராக தும்மினால் கூட அந்த திரைப்படங்கள் வெளிவருவதில் சிக்கல் உருவாக்கினார். பெரிய ஹீரோக்கள் மனம் நொந்து கலங்கினர், தவித்தனர்.
யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியவில்லை. புலம்பவும் முடியவில்லை. வேறு வழியே இல்லாமல் பற்களை கடித்து கொண்டு அமைதி காத்தனர்.
இப்போது தங்களுக்கு இருந்த ஒரு எதிரி மறைந்து விட்டார். இன்னொரு எதிரி நோய்வாய்ப்பட்டு படுத்திருக்கிறார். இனி நிம்மதியாக படங்கள் எடுக்கலாம், நடிக்கலாம், திரையிடலாம் என்ற பெருமூச்சு விடுகின்றனர்.
தங்கள் படைப்புகளுக்கான தடை இல்லை என்று நிம்மதி கொள்கின்றனர். இதில் மகிழ்ச்சி தாங்க முடியாத ஒரு பிரிவினர் ஸ்டார் ஹோட்டலில் பார்ட்டி வைத்து கொண்டாடியதாகவும் கூறுகிறார்கள்.
என்ன கொடுமை போங்க…!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.