December 21, 2016
கொடநாடு பங்களாவில் சர்வேயர்கள்..? விற்கப் படுகிறது…?! அடப் பாவிங்களா..அதுக்குள்ளவா..!?
அதிர்ச்சியாக இருக்கிறது மக்களே. ஒவ்வொரு நாளும் புதுப் புது வதந்திகள், புதுப் புது செய்திகள், புதுப் புது அட்டகாசங்கள் என அம்மா மறைவிற்குப் பின் தமிழ்நாடு குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது.
எதை நம்புவது, எதை நம்ப மறுப்பது என்பதே தெரியவில்லை. லேட்டஸ்டாக அம்மா அடிக்கடி போய் தங்கி ஓய்வெடுக்கும் கொடநாடு பங்காளாவில் நிலசர்வேயர்கள் அளவெடுக்கிறார்கள். வெளிநாட்டு தொழில் அதிபர்கள் பார்வையிடுகிறார்கள் என்று செய்திகள் வருகிறது.
ஊட்டியின் அம்மா பக்தர்கள் எப்போதும் கொடநாடு பங்களா மீது ஒரு கண் வைத்த படியே இருக்கிறார்கள்.
அம்மா காலடி பட்ட அந்த பங்களாவை கோவில் போன்றே கருதுகிறார்கள். அப்படி வழிபடும் சில அம்மா பக்தர்கள், அங்கு திடீர் என்று கூட்டம் கூட்டமாய் வெளி நாட்டு ஆட்கள் வருவதும் சர்வேயர்கள் நிலத்தை அளப்பதுமாக இருப்பதாகக் கூறி அதிர வைக்கிறார்கள்.
இது உண்மையா என்று ஊட்டியின் கட்சி நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு கேட்டால் நாங்கள் எதுவும் சொல்லும் சூழ்நிலையில் இல்லை.
அம்மா இறந்த அதிர்ச்சியில் இருக்கிறோம். அதைவிடவா ஒரு கட்டிடம் விற்கப்படுவது எங்களுக்கு அதிர்ச்சி என்று வருத்தமாக சிரிக்கிறார்கள்..!
என்ன கொடுமை சார் இது
கொடநாடு பங்களாவில் சர்வேயர்கள்..? விற்கப் படுகிறது…?! அடப் பாவிங்களா..அதுக்குள்ளவா..!?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.