தமிழகத்தில் வருமான வரி சோதனையானது கரூர் அன்புநாதனில் ஆரம்பித்த விவகாரம், நத்தம் விசுவநாதன், வேலூர் சேகர் ரெட்டி, தற்போது தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் வரை தொடர்கிறது.
இத்தனை காலமும் அமைதியாக இருந்த வருமான வரித் துறை, ஜெயலலிதா மறைந்த பின், ஏன் வேகமாகி இருக்கிறது. இதற்கான காரணம் பா.ஜ மற்றும் பிரதமர் மோடி என்றும் தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கூறி வருகின்றன.
ஜெயலலிதா போயஸ் தோட்டத்தில் வைத்து அடித்ததாக, ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா எப்போது பரபரப்பு கிளப்பினாரோ, அன்றே பா.ஜ.,வின் ஆட்டம் துவங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. சசிகலா புஷ்பா பிரதமர் மோடியை சந்தித்த போது தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று மோடி கேட்டவுடன் தயாராக வைத்திருந்த மொத்த விஷயங்களையும் அவர் ஆதாரங்களுடன் கூறியதாக தெரிகிறது.
விபரங்களை அறிந்து கொண்ட மோடி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம்; உங்களுக்கு பா.ஜ., அரசு முழு பக்கபலமாக இருக்கும். தமிழகத்தில் இருக்கும் ஆட்சி அதிகாரங்களின் மோசடிகளை மட்டும் ஆதாரங்களுடன் திரட்டி தருமாறும் சசிகலாவிடம் கூறியதாக தெரிய வருகிறது.
தன்னை கைது செய்யும் சூழ்நிலையிலும், துளியும் கவலையின்றி சசிகலா புஷ்பா தமிழகம் வந்து போனதும், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது பின்னால் பா.ஜ.வின் ஆதரவு இருப்பதால்தான் அவர் தைரியமாக தமிழகம் வந்தார் என்றும் கூறப்படுகிறது.
சசிகலா புஷ்பா தமிழக அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியுடன் உள்ள பலரையும் சந்தித்து விவரங்களையும், அதிமுகவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி, மத்திய அரசுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு அதிகார மட்டங்களில் இருந்து கொண்டு, அதிகாரத்தை பயன்படுத்தி அளவுக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கிக் குவித்திருக்கும் அதிகாரிகள் பலரது மீதும் வருமான வரித் துறையின் அதிரடி சோதனை தொடரும் என்றும் கூறப்படுகிறது.
தேவையானால், போயஸ் தோட்டத்தை நோக்கியும் வருமான வரித் துறையினர் செல்ல வெகு நேரம் ஆகாது என்று சூசகமாக எதையோ சொல்கிறார் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர். தமிழகத்தைப் பொறுத்த வரையில், பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க., அரசு தொடர்ந்து செயல்படுவதில், இப்போதைக்கு, பிரதமர் மோடி தொந்தரவு கொடுக்க விரும்பவில்லை.
அதே போல பன்னீர்செல்வம் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க யார் நினைத்தாலும், அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் பா.ஜ., அரசு இறங்கி செயல்படும் என டில்லி மூத்த அரசியல்வாதிகள் கூறுகின்றனர்.
தற்போதைய ரெய்டின் பின்னணியில் சசிகலா புஷ்பா இருப்பதாக கூறப்படுகிறது. சசிகலா புஷ்பா எந்த நேரமும் பிரதமர் மோடியை சந்திப்பார் என்றும், அப்போது, ஜெயலலிதா மரணத்தில் மறைந்து கிடக்கும் மர்மங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்றும் அதற்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரிக்கையும் வைக்க உள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.