Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

வாழைப்பழத்தோலில் இவ்வளவு நன்மைகளா..? அவசியம் படியுங்கள்.!!!


 
வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு, தோலை விசிறி எறிவோம். ஆனால் அந்த தோலினால் பற்பல பயன்கள் உண்டு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
முள்ளை எடுக்க..
கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம்  வேண்டாம்.
முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.
சோரியாஸிஸ் தொல்லை நீங்க..
சோரியாஸிஸ் போன்ற சரும நோய்கள் ஏற்பட்டால்  சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி பாளம் பாளமாக வெடித்திருக்கும். பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.
மருக்கள்  நீங்க..
வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். ஒரே வாரத்தில்  மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.
சரும பிரச்சினை தீர..
ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஏற்படும். வாழைப்பழத் தோலை  ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவி வந்தால்  விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
வெண்மையான பற்கள் பெற.. 
தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு  பற்களை தேயுங்கள்.  நாளடைவில் பற்கள் மின்னும்.
கண் கருவளையம் நீங்க..
தினமும் வாழைப்பழத்தோலை கண் கருவளையத்தில் வைத்து மெல்ல தேய்த்து வந்தால் நாளடைவில் கருவளையம் மறைந்துவிடும்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.