
உ.பி.யி ல் காங்கிரசுடன் சமாஜ்வாடி கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் இன்னும் ஐந்தாறு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், பாஜ, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இப்போதே தீவிரமாக களத்தில் குதித்துள்ளன. இக்கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரதயாத்திரைகளையும் நடத்தி வருகின்றன. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இம்மாநிலத்தில் அதிக இடங்களில் வென்ற பாஜ, இந்தமுறை ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் உள்ளது. தொடர் தோல்வியை சந்தித்து வரும் காங்கிரசும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென தீவிரம் காட்டுகிறது. கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி மெகா யாத்திரை மேற்கொண்டார். ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் சமாஜ்வாடி தலைவர் முலாயமும், அவரது மகன் முதல்வர் அகிலேஷும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய எதிர்க்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜும் கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது.தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், எதிர்பாராத திருப்பமாக காங்கிரசுடன் கைகோர்க்க சமாஜ்வாடி திட்டமிட்டுள்ளது. உட்கட்சி பூசல் காரணமாக சமாஜ்வாடிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முடிவை அக்கட்சி எடுத்துள்ளது. கூட்டணி குறித்து இருகட்சி தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இகுறித்து அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘சமாஜ்வாடி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பட்சத்தில் 300 சீட்களுக்கு மேல் கிடைக்கும். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது’’ என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.