December 7, 2016
மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள்..! புரளியைக் கிளப்பும் பௌத்த பிக்குகள்
நாட்டில் இனவாதம் எனும் நெருப்பு பற்றவைக்கப்பட்டு அது கொஞ்சம் கொஞ்சமாக புகைக்கவும் தொடங்கிவிட்டது.
இந்த நெருப்பை அணைய விடாமல் காத்துக் கொண்டு வருவது யார் என்பதை அரசு கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் அது முழு நாட்டையுமே பற்ற வைத்து விடும் அபாய நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் இனவாதச் செயற்பாடுகளுக்கும், குழப்பங்களுக்கும் விடுதலைப்புலிகளே காரணம் என்ற வகையில் தற்போது புதுத் தகவல் ஒன்று பரப்பப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு தோல்வியைத் தொடர்ந்து ஞானசார தேரர் நேற்று காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த காணொளியிலேயே அவர் இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் மட்டக்களப்பில் உண்மைப் பின்னணி என்ற குறித்த காணொளி மூலம் அவர் தெரிவித்துள்ளதாவது,
எங்களை கைது செய்ய தற்போது செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றது அப்படி எம்மை கைது செய்ய முடியாது அதனையும் தாண்டி கைது செய்தால் இன்னும் நூறு ஞான சாரர்கள் வருவார்கள். அவர்கள் ஏற்கனவே உருவாகிவிட்டார்கள்.
அதனால் அந்த எண்ணத்தை கைவிட்டு விடுங்கள். மேலும் சிலர் நாம் மட்டக்களப்புக்கு செல்லாமல் திரும்பியமைக்கு காரணம் நாம் பயந்து விட்டோம் என பொய்யான கருத்துகளை வெளியிடுகின்றார்கள்.
நாம் ஒன்றும் பயத்தில் திரும்பவில்லை, எமது புத்திசாலித்தனத்தினாலேயே திரும்பினோம். பிரச்சினைகளை உருவாக்க மட்டக்களப்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதனை தாண்டி நாம் அங்கு சென்றிருப்போம் என்றால் நாம் இறந்திருப்போம் இப்போது இவ்வாறான காணொளியினை வெளியிட்டு இருக்கவும் முடியாது.
மேலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள இப்போதைய நிலைமை தொடர்பில் ஜனாதிபதி பிரதமர் உட்பட அரசு உடனடியாக அனைத்து மக்களுக்கும் மறைக்காமல் தெரியப்படுத்த வேண்டும்.
அதனை விட்டு விட்டு பொய்யாக நீதிமன்ற உத்தரவுகளைப்பெற்றுக் கொண்டு எம்மை அடக்க முற்பட வேண்டாம்.
இதேவேளை தமிழர்களுக்கு இந்த நாட்டில் என்ன பிரச்சினை இருக்கின்றது? சிங்களவர்களுக்கு இல்லாத பிரச்சினை அவர்களுக்கு எங்கிருந்து வந்தது.
தமிழர்களுக்கு நாடு முழுவதும் பரவி இருக்க முடியுமானால், அவர்களுக்கு நாடு முழுவதும் வியாபாரம் செய்ய அனுமதி கொடுக்கப்படுமானால் ஏன் சிங்களவர்களுக்கு மட்டும் ஏன் அந்த உரிமை மறுக்கப்படுகின்றது.
மேலும் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறினாலும் அடி நெருப்பில் தணல் இருப்பது போல இன்றும் இருக்கின்றார்கள். அதனால் யார் இனவாதத்தை பரப்புவது எனவும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
எனவே உடனடியாக இது தொடர்பில் கவனம் எடுக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
அதனை விடுத்து முட்டாள் தனமான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தால் சிங்கள மக்கள் ஆயுதம் எடுப்பார்கள். அதனால் இந்த பிரச்சினைகளை இப்போதே தீர்த்துக் கொள்ளுங்கள்.
மேலும் சிங்களவர்கள் என கூறிக்கொள்ளும் தலைவர்கள், தமிழ் தலைவர்கள், புலிகளின் குழுக்களின், மற்றும் எதற்கும் பயன்படாத கள்ளத் தோணியில் வந்தவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
புதிய அரசியல் யாப்பு பற்றிய கலந்துரையாடல்கள் நடக்கும் இத்தகைய தருணங்களே அதற்கு பொருத்தமானதாகும் அதனால் உடனடியாக பேச்சு வார்த்தைகள் நடத்துங்கள்.
அது மட்டுமல்லாமல் எமது சிங்கள அமைப்புகளும் மற்றும் அனைத்து சிங்கள இளைஞர்களும் மிகவும் அவதானத்துடன் தமது செயற்பாடுகளைச் செய்யுங்கள்.
உங்களை அடக்க நாட்டின் பொலிஸாரும் அரசும் காத்திருக்கின்றது, அதனால் மிகக் கவனத்துடன் உங்களது செயற்பாடுகளைச் செய்யுங்கள் எனவும் ஞானசாரதேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு திண்டாடி வருகின்றது. இத்தகைய நிலையில் இல்லாத ஓர் புதுக்குழப்பத்தை மக்கள் மத்தியில் பரப்பும் விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.
அனைத்து மக்களும் பிரச்சினை அற்ற ஓர் ஒற்றுமை மிக்க சகோதரத்துவ வாழ்வினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் போது இவ்வாறாக கருத்து வெளியீடுகள் எவ்வகையிலும் வரவேற்கத்தக்கது அல்ல.
இது பூதாகரமாக மாறுவதற்கு முன்னர் அரசு தலையிடாமல் இருந்தால், இதன் அடுத்த நிலை மீண்டும் ஓர் கருப்பு யூலை போல கருப்பு ஜனவரி ஏற்படும் அபாயம் ஏற்படும் என்றே தெரிவிக்கப்படுகின்றது.
இப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் பொறுப்பு வாய்த அரசு என்ற வகையில் தனது பிடிவாதத்தை சிறிது தகர்த்தி முழு நாட்டையும் மக்களையும் காக்க வேண்டியது என்பது அவசியம் மட்டும் அல்ல அவசரம்…,
மட்டக்களப்பில் விடுதலைப்புலிகள்..! புரளியைக் கிளப்பும் பௌத்த பிக்குகள்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 07, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 07, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.