Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 7, 2016

பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகை ரோஜா சவால்..!



பிரதமர் நரேந்திர மோடி தனது தாயாரிடம் உள்ள நகைகளுக்கு ரசீது காட்ட முடியுமா என நடிகை ரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆந்திர மாநிலம் நகரி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திரைப்பட நடிகையுமான ரோஜா திருப்பதி கோவிலில் இன்று தரிசனம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வீட்டில் வைத்திருக்கும் தங்கத்துக்கு அரசு கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அவரின் தாயாரிடம் உள்ள நகைகளுக்கு ரசீது காட்ட முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், கருப்புப் பணம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித் துறையினர் சோதனையிட வேண்டும் என்றும், ரோஜா கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.