Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 31, 2016

தூக்கம் குறைந்தால் இதயம் வெடிக்கும்…! எச்சரிக்கிறது புதிய ஆய்வு…!!



மனிதன் உறங்குவதற்குக்கூட நேரமில்லாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றான். உறங்க வேண்டிய நேரத்தில் உழைப்பும், உழைக்க வேண்டிய நேரத்தில் உறக்கமும் என்று மனிதனின் வாழ்க்கையில் ஒரு முறையில்லாமல் இருந்து கொண்டிருக்கின்றது.
இந்நிலையில், மனிதனுக்கு தூக்கமின்மையால் ஏற்படக்கூடிய நோய்கள் பல இருக்கின்றன. அதில், ஒன்று தான் இதய நோய் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஜெர்மனியின் போன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டேனியல் கியூட்டிங் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 24 மணி நேர சேவைப்பணியாளர்களில் குறைவான தூக்கத்தை வழக்கப்படுத்திக் கொண்டவர்களுக்கு, இதய நோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்று கண்டறிந்துள்ளார்.
மேலும், போதிய தூக்கமின்மையால் இதய நோயுடன், இரத்த அழுத்தமும் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதனால், ஒரு மனிதன் தனக்கு தேவையான தூக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.
இல்லையென்றால், அவனுடைய இதயம் வெடிப்பதற்குண்டான வாய்ப்புக்கூட இருப்பதாக கூறப்படுகின்றது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.