December 31, 2016
தொழிலதிபர் சேகர் ரெட்டியின் ஜாமின் மனு தள்ளுபடி!
நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தொழில் அதிபர் சேகர்ரெட்டியின் ஜாமின் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தொழில் அதிபர் சேகர்ரெட்டியுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீநிவாசலு, பிரேம்குமார், ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரின் ஜாமின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 170 கோடி ரூபாய் பணமும், 127 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து, சேகர் ரெட்டியும், அவரது நண்பர்களான ஸ்ரீநிவாசலு, பிரேம்குமார் , ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் தரப்பில் ஜாமின் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி விஜயலட்சுமி, விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது எனக்கூறி இவர்கள் 5 பேரின் ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
தொழிலதிபர் சேகர் ரெட்டியின் ஜாமின் மனு தள்ளுபடி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.