Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 19, 2016

“தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும்” - ஜெ. பேரவை தீர்மானம்



அதிமுக தலைமை பொறுப்பை சசிகலா ஏற்பதுடன், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டும் என ஜெ. பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். சமாதிக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் சமாதியில் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் இன்று அஞ்சலி செலுத்தினர். மறைந்த முதல்வரின் நினைவிடத்தில் 50 மாவட்டங்களை சேர்ந்த ஜெ.பேரவை செயலாளர்கள் அதிமுக தலைமை பொறுப்பை சசிகலா ஏற்பதுடன், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு தமிழக முதல்வராக பதவியேற்க வேண்டும் என தீர்மானத்தை நிறைவேற்றினர்.

பின்பு செய்தியாளர்களை சந்தித்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தாங்கள் ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளதாகவும், சசிகலா பொறுப்பை ஏற்று அம்மா போல செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.