Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 19, 2016

நீடிக்குமா..? நீடிக்காதா..? தலைமைச்செயலக அதிகாரிகளின் பெரும் கவலை!!



தமிழகத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளக்கூடிய முதல்வர் கிடைத்துள்ளார் என அதிகாரிகள் பெருமைப்பட்டு வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஜெ.வுக்கு முன், பின் என பார்க்கலாம் என்றே கூறலாம். முதல்வரை பார்ப்பதும், அவரிடம் பேசிவிட்டால் அதிசயமாக நினைக்கக்கூடிய நிலைமை தற்போது இல்லை.
‘வர்தா’ புயல் சென்னையை தாக்குவதற்கு முன்பே, நள்ளிரவில் முதல்வரின் அலுவலகம் மற்றும் பிற அமைச்சர் அலுவலகங்களுடன் முதல்வர் பன்னீர்செல்வம் நேரடி தொடர்பில் இருந்தது தமிழகத்தில் நீண்ட நாளுக்கு பிறகான நிகழ்வு எனக்கூறப்படுகிறது.
அந்தந்த துறை அதிகாரிகள் சுதந்திர காற்றை சுவாசித்து சுயமாக முடிவெடுத்து துறை அமைச்சரிடம் எடுத்து சொல்லி மேலிட உத்தரவுக்காக காத்திருக்காமல் முடிவெடுத்து செயல்படுவது என தமிழக அரசு தொடர்ந்து செயல்படவேண்டும் என அதிகாரிகள் முதல் அனைவரும் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
ஆனால், மீண்டும் அதிகாரம் தோட்டத்தை நோக்கி போவது போல் நடக்கும் நிகழ்வுகள்! மாற்றங்கள் நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளதால் அதிகாரிகள் கவலையடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.