Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 1, 2016

காவேரி மருத்துவமனையில் குவிந்த திமுக தொண்டர்கள். தலைமை கழகம் முக்கிய அறிவிப்பு



திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனை முன் இன்று காலை முதல் திமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் அந்த பகுதியே பெரும் பரபரப்புடன் உள்ளது. இந்நிலையில் திமுக தலைவரின் உடல் நிலைகுறித்த அறிவிப்பு ஒன்றை சற்று முன் திமுக தலமைக்கழகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தலைவர் கலைஞர் அவர்கள் 'ஒவ்வாமை'க்காக சிகிச்சை பெற்று, ஓய்வு எடுத்துவந்த நிலையில் தொடர்ந்து மேலும் சில பரிசோதனைகளும், அதன் தொடர்பான சிகிச்சைகளும் பெற வேண்டியிருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று (01.12.2016) அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் ஒரு சில நாட்கள் தலைவர் கலைஞர் அவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருப்பதால், தலைவர் கலைஞர் அவர்களைப் பார்க்க கழகத் தோழர்களும், நண்பர்களும், பார்வையாளர்களும் நேரில் வராமல் அன்புகூர்ந்து ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

இவ்வாறு திமுக தலைமை கழகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.