Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!… பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!!



மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள பப்புவா நியூ கினயா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் மற்றும் பசிபிக் சுனாமி எச்சிரிக்கை மையம் கூறியுள்ளது.
Taron, நியூ அயர்லாந்து கிழக்கு பகுதியில் 60 கி.மீ தொலைவில் சுமார் 75 கி.மீ ஆழத்தில், உள்ளுர் நேரப்படி மாலை 8.51 மணிக்கு இந்த நிலநடுக்கும் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பப்புவா நியூ கினியா, நவ்ரூ, சாலமன் தீவுகள், இந்தோனேஷியா, உட்பட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நிலநடுக்கத்தால் பப்புவா நியூ கினயாவில் சில இழப்புக்கள் மற்றும் சேதங்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்னும் சேதங்கள் குறித்த தெளிவான அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.