Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

புதிய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் யார் தெரியுமா...


ஊழல் குற்றச்சாட்டுகளில் பதவி இழந்துள்ள ராம் மோகன் ராவுக்குப் பிறகு, புதிய தலைமைச் செயலாளராக பதவிக்கு வந்துள்ள கிரிஜா வைத்தியநாதன் குறித்த செய்திகள்தான் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன.
வார்தா புயல் சேதம், ராம் மோகன் ராவ் வீட்டில் ரெய்டு போன்ற பரபரப்புகளை ஓரம் கட்டுமளவுக்கு, 'கிரிஜா வைத்தியநாதன் யார் தெரியுமோ?' என்ற கேள்விதான் எங்கு பார்த்தாலும்.

நடிகர் எஸ்வீ சேகரோட தம்பி மனைவிதான் கிரிஜா என பலர் சமூக வலைத்தளங்களில் போட்டோவுடன் செய்திகளைப் பகிர்ந்து வரும் நிலையில், கிரிஜாவின் பின்னணி குறித்த புதிய செய்திகள் வெளியாகியுள்ளன.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கிட்டரமணனை நினைவிருக்கிறதா? 1990லிருந்து 92வரை ஆளுநராகப் பதவி வகித்தவர். அவரது மகள்தான் இந்த கிரிஜா. கிரிஜாவின் கணவர் பெயர் ராஜா வைத்தியநாதன். இவர் எஸ் வீ சேகருக்கு உடன் பிறந்த சகோதரர். மூத்தவர். அந்த வகையில் எஸ்வீ சேகரின் சொந்த அண்ணிதான் கிரிஜா.
கிரிஜா தலைமைச் செயலாளராக்கப்பட்டதில் சிபாரிசு அரசியல் ஏதுமில்லை என்கிறார்கள். தனது சொந்தத் தகுதி, சீனியாரிட்டி அடிப்படையிலேயே அவர் பதவிக்கு வந்திருக்கிறார்.
கிரிஜா வைத்தியநாதன் பெயர் லஞ்சம் ஊழலில் இதுவரை அடிபட்டதில்லை. ஹெல்த் எகனாமிக்ஸில் டாக்டர் பட்டம் பெற்றவர் கிரிஜா. தனது கல்வி மற்றும் அனுபவத்தை வைத்து கடந்த ஆட்சிக் காலங்களில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்துக்கு பெரிய அளவில் பங்களிப்பைச் செய்தவர் கிரிஜா.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.