Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 21, 2016

வைகோவை புறக்கணிக்கவில்லை என்று திருமாவளவன் விளக்கம்



விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டு அழைப்பிதழில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பெயர் இடம்பெறாத விவகாரத்தில், வைகோவை புறக்கணிக்கவில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விளக்கம் அளித்துள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக புதுச்சேரியில் வரும் 28ம் தேதி அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கான அழைப்பிதழில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெயர் இடம்பெறவில்லை.
ஆனால், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களின் பெயர்கள் மட்டும் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரம், தமிழக அரசியலில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த விவாகரம் தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ரூபாய் நோட்டு விவகாரத்தால், அப்பாவி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். பொதுத்துறை வங்கிகளை சீர்குலைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு எடுத்த நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.
பொது சிவில் சட்டம் இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது என்ற திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அரசியலைமைப்பு மாநாட்டில் மதிமுக பங்கேற்காதது குறித்தும் விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில், வைகோவை விடுதலைச் சிறுத்தைகள் புறக்கணிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.