
வேலூர் மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக தாய் தனது இரண்டு பெண்குழந்தைகளுடன் விவசாயக் கிணற்றுக்குள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்துள்ள ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜீவக்குமார். இவருக்கும் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
சென்னையில் தங்கி பணியாற்றி வரும் ஜீவக்குமாருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஊருக்கு வந்த ஜீவக்குமாருக்கும் அவர் மனைவிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதையடுத்து அவர் கோபத்துடன் சென்னைக்கு கிளம்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து மனைவி திவ்யா மற்றும் இரண்டு குழந்தைகள் காணவில்லை என்று அப்பகுதி மக்கள் ஜீவக்குமாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து தன் மனைவி மற்றும் குழந்தைகளை பல இடங்களில் தேடிய ஜீவக்குமார் விவசாய கிணற்றுக்குள் அவர்கள் தூக்கிட்டு சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலங்களை மீட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.