Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 25, 2016

பணத்தட்டுப்பாடு எதிரொலி: கல்விக்கு நெல் மூட்டைகளை கட்டணமாக கொடுத்த விவசாயிகள்


பணத்தட்டுப்பாடு எதிரொலி காரணமாக, கல்விக்கு நெல் மூட்டைகளை விவசாயிகள் கட்டணமாக கொடுத்துள்ளனர்.

கடந்த மாதம் 8ஆம் தேதி, ரூபாய் நோட்டுக்கள் விவகாரத்தில் மத்திய அரசு அதிரடியான முடிவுகளை வெளியிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் கடும் பணத்தட்டுப்பாடு உருவானது. வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இரண்டு மாதங்கள் ஆகும் நிலையில், இன்றும் இந்த நிலை தொடர்ந்து வருகிறது.


இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டம் பிரதர்வார் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களின் குழந்தைகளின் கல்வி கட்டணத்தை கட்ட முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து பணத்திற்கு பதிலாக நெல் மூட்டைகளை கட்டணமாக பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து நெல் மூட்டைகள், அருகிலிருந்த மண்டியில் விற்பனை செய்து, கல்வி கட்டணத்தை எடுத்துக் கொண்டனர். கல்விக்காக தங்களின் அடிப்படை தேவைகளையே அர்ப்பணிக்கும் அளவிற்கு மிகவும் மோசமான நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.