December 27, 2016
அப்பல்லோவுக்கு வந்து போன மர்ம பெண்மணி -ரகசிய ஆடியோ!!..சசிகலா புஷ்பா கையில் சிக்கிய ஆதாரம்!!…
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அ.தி.மு.க-வின் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி தற்போது ‘சசிகலா vs சசிகலா புஷ்பா’ என்ற புள்ளியில் வந்து நிற்கிறது.
‘அ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா முன்னிறுத்தப்பட்டால், அவரை எதிர்த்து நிற்பேன்’ என்று கூறிய சசிகலா புஷ்பா, அதற்கான முயற்சிகளிலும் வேகம் காட்டத் தொடங்கியிருக்கிறார்.
‘கட்சி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான சசிகலா தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் உறுப்பினராக இல்லாத சூழ்நிலையில், அவர் எப்படி அ.தி.மு.க பொதுசெயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியும்?’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்குத் தொடுத்தார் சசிகலா புஷ்பா. அதற்குப் பதிலடியாக, ‘சசிகலா பொதுசெயலாளராக பொறுப்பேற்கும் வகையில் சட்ட விதிகள் தளர்த்தப்படும்’ என்று வழி ஏற்படுத்திக் கொடுத்தார் பொன்னையன்.
அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே டெல்லி பி.ஜே.பி-யோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, அ.தி.மு.க-வின் ஒவ்வொரு அசைவையும் டெல்லித் தலைமைக்கு அப்டேட் செய்து கொண்டிருந்தார் சசிகலா புஷ்பா. பதிலுக்கு ‘we are with you’ என்று பி.ஜே.பி பெருந்தலைகள் கொடுத்த ஆதரவு தான், தமிழக அரசுக்கு உரிமை மீறல் குழு புகார் மூலமாக நோட்டீஸ் கொடுக்கும் அளவுக்கு விஸ்வரூபம் எடுக்க வைத்தது.
இதனிடையே, ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பேசிய ஆடியோ ஆதாரம் ஒன்று மேடம் கைவசம் உள்ளது. அதையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் போகிறாராம். அதன் அடிப்படையில், ஜெ. சிகிச்சை பெற்று வந்த போது அப்போலோ வந்து சென்ற ஐதராபாத் மர்ம பெண்மணி மற்றும் சிகிச்சை அளித்த ஒரு மருத்துவர் ஆகியோர் குறித்து தீவிர விசாரணை நடத்தக்கோரி கேட்க உள்ளார்களாம். முக்கியமாக ஜெ. இறப்பதற்கு முன்பு கோவில் பிரசாதம் என்று உணவோடு சேர்த்து ரகசியமாக அவருக்கு கொடுக்கப்பட்ட தீர்த்த ரகசியங்களும் இதில் வெளிவரும்.
இதனால், அ.தி.மு.க பொதுக்குழுவில் அடுத்த ரனகளத்தை எதிர்பார்க்கலாம்…. அதுவரை காத்திருப்போம்.
அப்பல்லோவுக்கு வந்து போன மர்ம பெண்மணி -ரகசிய ஆடியோ!!..சசிகலா புஷ்பா கையில் சிக்கிய ஆதாரம்!!…
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 27, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 27, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.