Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 28, 2016

எங்க சின்னம்மாவுக்கு எதிராக… யார் வந்தாலும் இதுதான் நடக்கும்..! ஆவடிகுமார் ஆவேசம்..!!


சென்னையில் அதிமுக தலைமையகத்திற்கு வந்த சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் அவரது வழக்கறிஞர் ஆகியோர் அதிமுகவினரால் தாக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது வழக்கறிஞர், ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்திருக்கின்றனர். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் தாக்கியதில் லிங்கேஸ்வரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இச்சம்பவம் பற்றி ஆவடிகுமார் கூறுகையில், சசிகலா புஷ்பா யார், அதிமுகவின் உள் விவகாரத்தில் இவர் ஏன் தலையிட வேண்டும், அவரையோ அவரது ஆதரவாளர்களையோ தலைமையகத்தில் எப்படி அனுமதிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர், திமுகவுடன் கள்ள உறவு வைத்துகொண்டு அதிமுகவை காட்டி கொடுத்தவர், சசிகலாவின் கணவர் யார்? என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தொண்டர்கள் கொதிச்சு போய் இருந்ததால் சசிகலாபுஷ்பாவின் ஆதரவாளர்கள் அடித்திருக்கின்றனர். எங்க சின்னம்மாவை பற்றி யார் விமர்சித்தாலும் அதிமுகவின் அதிரடி தொடரும் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.