கிராமங்கள் இருந்து வேலை தேடி தற்போது பட்டணத்தை நோக்கி பலர் போய்க்கொண்டிருக்கும் நிலையில் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டும் வாழ்கிறாராம். இந்த அதிசய கிராமம் சீனாவில் உள்ளது.
சீனாவில் உள்ள ஜுயென்சாஷே என்ற கிராமத்தில் உள்ள பொதுமக்கள் கடந்த எட்டு ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வேலை தேடி வேறு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர்.
ஆனால் அந்த கிராமத்தில் லுய் ஷெங்ஜியா என்ற ஒரே ஒரு இளைஞர் மட்டும் எங்கும் செல்லாமல் தனியாக வசித்து வருகிறார். இந்த கிராமத்தை விட்டு பிரிய மனமில்லை என்றும் அதனால் இந்த கிராமத்தை விட்டு வெளியேற மாட்டேன்' என்றும் கூறிவருகிறார்
இவரது ஒரே பொழுதுபோக்கு இவருடன் உள்ள ஒரு நாயும், ஐந்து ஆடுகளும்தான். இவர் தனக்கு தேவையான பொருட்களை அருகிலுள்ள கிராமத்தில் இருந்து வாங்கி கொள்வாராம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.