December 25, 2016
சிவகங்கை அருகே அடையாளம் தெரியாத இளைஞர் வெட்டிக்கொலை
அடையாளம் தெரியாத இளைஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்டு சம்பவம் குறித்து உடலை கைப்பற்றி சிவகங்கை காவல்துறையினர் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கையை அடுத்துள்ள உசிலம்பட்டி விலக்கு அருகே உள்ள முட்புதரில் நேற்று காலை 25 வயது மதிக்கதக்க இளைஞர் சடலம் கிடப்பதாக அப்பகுதியில் ஆடுமேய்க்க சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபரின் கழுத்து, நெற்றி அருகே அரிவாளால் வெட்டியது போன்ற அடையாளம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இறந்தவர் யார் என்பது குறித்து அடையாளம் காணப்படாத நிலையில் அனைத்து காவல் நிலையங்களிலும் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை அருகே அடையாளம் தெரியாத இளைஞர் வெட்டிக்கொலை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 25, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.