Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 18, 2016

முதல்வராகிறார் சசிகலா !?.. பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் ஆப்பு!!.. அமைச்சர் பரபரப்பு தகவல்!!…



முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பை தொடர்ந்து, அவர் வகித்த பொதுச்செயலாளர் பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என கூறி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சசிகலா முதல்வராக வேண்டும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். அவர் இறந்த சில மணி நேரங்களிலே ஒ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.
இதனால் அதிமுகவின் பொதுச் செயலாளர்பதவியை சசிகலா ஏற்க வேண்டும் என்று பன்னீர் செல்வம் உட்பட அனைத்து அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசுகையில், சசிகலா முதல்வராக வேண்டும் என்று ஜெயலலிதா பேரவையினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இதனையடுத்து, இந்த தீர்மானத்தை ஜெயலலிதா பேரவையின் 50 மாவட்ட செயலாளர்களும் நிறைவேற்றியுள்ளதாக கூறியுள்ளார்.
இதனைதொடர்ந்து வரும் 18 ஆம் தேதி ஜெயலலிதாவின் சமாதியில் மொட்டை அடித்து தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளதாகவும், அந்த தீர்மான நகலோடு சசிகலாவை சந்தித்து முதல்வராக வேண்டும் என்று வலியுறுத்துவோம் என உதயகுமார் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா போட்டியிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுப்போம் எனவும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.