Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 13, 2016

கனிமொழிக்கு தடை…!! டெல்லிக்கு செல்கிறார் புதியவர்…!! தொடங்கியது ஸ்டாலின் அதிரடி…!! அலறும் சீனியர்கள்



திமுக பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி கிடைக்க இருப்பதாக கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலின் அனைத்து முக்கிய பணிகளிலும் தன்னை சேர்ந்தவர்கள் இடம் பெற வேண்டும் என்று விரும்புகிறாராம்.
அவர்கள் திமுகவில் மு.க.ஸ்டாலினின் வளர்ச்சி என்பதை மட்டுமே யோசிக்க கூடியவர்களாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறாராம்.
என்னதான் அனுபவம் இருந்தாலும், சீனியர்கள் மு.க.ஸ்டாலினை ஏற்றுக் கொண்டாலும் எந்த நேரத்திலும் அவர்கள் உள்ளடி வேலையில் இறங்குவார்கள் என்கிற அச்சம் நிலவுகிறது என்றும் கூறப்படுகிறது.
திமுக தலைவர் டெல்லி லாபிக்கு மருமகன் முரசொலி மாறனை வைத்து இருந்தார். அவரை ”என்னுடைய மனசாட்சி” என்றும் கூறினார். அந்த அளவு உண்மையாகவும், விசுவாசமாகவும் இருந்தவர் அவர்.
அவரது மறைவிற்கு பின்பு அவரது மகன் தயாநிதி மாறன் அனுப்பப்பட்டார். அவர் தங்களது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டதாக திமுக நினைத்தது.
திமுகவிற்கு டெல்லி லாபியாக இருந்த தயாநிதி ஓரங்கட்டப்பட்டார். இடைக்காலத்தில் டி.ஆர்.பாலு நியமிக்கப்பட்டார்.
அவரை பற்றி சொல்லவே வேண்டாம். திமுக தலைவரே ஆடிப்போகும் அளவு வளர்ந்தார். அவராலும் டெல்லியை தக்க வைக்க முடியவில்லை.
கருணாநிதியின் மகள் கனிமொழி அனுப்பப்பட்டார். இவரும், ராஜாவும் 2ஜி பிரச்சனையில் சிக்கி அழிக்க முடியாத அவ பெயர் பெற்றனர்.
திருச்சி சிவா எம்பியை வைத்து செய்யலாம் என்று நினைக்கும் போது அவர் அதிமுக எம்பி சசிகலாவுடன் இருந்த நெருக்கம் வெளியே தெரிந்து திமுகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியது.
தற்போது டெல்லிக்கு திமுகவின் லாபியாக செயல்பட புதியவரை மு.க.ஸ்டாலின் தேர்வு செய்துள்ளாராம். அவர்தான் திருச்சி அன்பில் பொய்யாமொழியின் மகன் மகேஷ் பொய்யாமொழி.
இவர் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். திருச்சியில் ஆட்டம் காட்டிய கே.என்.நேருவை அமுக்க திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் எம்எல்ஏவாக ஆக்கப்பட்டார்.
தற்போது ஸ்டாலினின் டெல்லி லாபிக்கு இவர் அனுப்பப்படுவதாக தெரிகிறது. அவரும் சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்று பணியை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.