Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 29, 2016

ஊழல் செய்யும் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து கீழே தள்ளி விடுவேன் : பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்


ஊழல் செய்யும் அதிகாரிகளை ஹெலிகாப்டர்களில் ஏற்றி சென்று கீழே தள்ளி விடுவேன்’ என்று பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ ஆவேசமாக எச்சரித்துள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸின் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்டே. இவர் கடந்த மே மாதம் அதிபராக பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ‘பிலிப்பைன்சில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் கடத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன்’ என தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார்.

அதிபரானதும் சொன்னது ேபாலவே, போதைப்பொருட்கள் கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடத்தலில் தொடர்புடைய ஏராளமானோரை என்கவுன்டர் செய்தார். ஆயிரக்கணக்கானோரை கொன்று, மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாக ரோட்ரிகோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும் தனது அதிரடி பேச்சுக்கள், நடவடிக்கைகளை அவர் குறைத்துக்கொள்ளவில்லை.

தான் மேயராக இருந்தபோது குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிலரை கொன்றதாகவும், சீன பெண்ணை பலாத்காரம் செய்த 3 பேரை என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதாக சமீபத்தில், ரேடியோ உரையில் வெளிப்படையாக கூறினார். கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவை கடுமையாக விமர்சித்தார். அமெரிக்காவின் தயவு தங்கள் நாட்டுக்கு தேவையில்லை என்று தெரிவித்த ரோட்ரிகோ, அதிபர் ஒபாமாவை ஆபாசமாக திட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு செல்ல இருந்த சுற்றுப்பயணத்தை ஒபாமா ரத்து செய்தார்.

 அதிரடிக்கு பெயர் பெற்ற அதிபர் ரொட்ரிக்கோ நேற்று புயலால் பாதிக்கப்பட்ட லுசோன் பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ஊழல் செய்யும் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று நடுவானிலிருந்து கீழே தள்ளிவிடுவேன். ஏற்கனவே இதே போல் நான் செய்திருக்கிறேன். மீண்டும் அதை ஏன் என்னால் செய்ய முடியாது?’’ என கூறினார். பிலிப்பைன்ஸ் அதிபரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், அந்நாட்டு அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.