December 18, 2016
ஜெயலலிதா கையெழுத்து மோசடி வழக்கு குறித்து ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில் டிராபிக் ராமசாமி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தபோது, ஜெயலலிதாவின் பெயரில் அவர் கையெழுத்திட்ட அறிக்கைகள் வெளியாயின.
உண்மையில் அந்த அறிக்கையில் ஜெயலலிதா கையெழுத்திடவில்லை. இந்த அறிக்கையை அவருடன் இருந்த சிலர் தயாரித்து போலி கையெழுத்து போட்டுள்ளனர். இதுகுறித்து அ.தி.மு.க. நிர்வாகி பொன்னையன், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகி பிரதாப் ரெட்டி உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, இதுகுறித்து தடய அறிவியல் நிபுணர்களை கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகவில்லை.
அவரது மாணவி என்று கூறி பாத்திமா என்பவர் ஆஜரானார். அவர், டிராபிக் ராமசாமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே, இந்த வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கூறினார்.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை ஜனவரி 9–ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜெயலலிதா கையெழுத்து மோசடி வழக்கு குறித்து ஐகோர்ட்டு உத்தரவு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 18, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.