மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கு விசாரணையில், எனக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் தனி. நான் தனி. எனக்கும் அவருக்கும் நட்பு மட்டுமே. அந்த சாதாரண நட்பை அடிப்படையாக வைத்துக்கொண்டு, நான் எனது சொந்த வருமானத்தில் வாங்கிய சொத்துக்களை காரணம் காட்டி அவருடன் குற்றவாளியாக்க முடியாது.
மேலும், நானும் ஜெயலலிதாவும் ஒரே முகவரியில் குடியிருந்தோம் என்பதற்காக நான் அவருடன் சேர்ந்து சதிதிட்டம் தீட்டினேன் என்று சொல்வது சரியில்லை. எனக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என்னையும் ஜெயலலிதாவுடன் சேர்த்து குற்றவாளியாக்கி வழக்கு போட்டது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் திமுக செய்த சதி என நீதிபதி முன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பிரச்சனை என்று வரும்போது, சசிகலாவின் நிலைப்பாடு இப்படி இருந்திருக்கையில், இப்போது மட்டும் பலனடைவதற்காக பிரிக்க முடியாத நட்பா..?? என அதிமுக வட்டாரத்திலேயே தொண்டர்கள் கேட்கிறார்கள்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.