Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

பன்னீர் செல்வத்திற்குதான் எங்கள் ஆதரவு.. வெங்கையா நாயுடு பரபரப்பு பேட்டி


முதல்வர் பன்னீர் செல்வத்திற்கே மத்திய அரசு ஆதரவு உண்டு என்று மூத்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
அதிமுக கட்சிக்குள் முதல்வர் பன்னீர் செல்வம், ஜெயலலிதா தோழி சசிகலா ஆகியோரின் ஆதரவாளர்கள் இரு பிரிவாக செயல்படுவதை போன்ற செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தந்தி டிவிக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஒரு கருத்தை வலியுறுத்தி தெரிவித்துள்ளார்.


வெளியாகியுள்ள பேட்டி துணுக்கில் வெங்கையா நாயுடு கூறியுள்ளதாவது: அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜகவுக்கு அக்கறையில்லை. ஆனால், எங்கள் ஆதரவு தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவருக்குதான் உண்டு. யார் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்? அவர் திரு.பன்னீர்செல்வம்தான்.

பன்னீர் செல்வத்தைதான் மேடம் ஜெயலலிதா ஏற்கனவே தேர்ந்தெடுத்தார் (முதல்வராக). அதுதான் அதிமுக கட்சியின் விருப்பம். பன்னீர் செல்வம்தான் தமிழக முதல்வர். எனவே அவரோடுதான் மத்திய அரசு தொடர்பு கொள்கிறது. தேவைப்படும் அனைத்து உதவிகளையும் பன்னீர்செல்வம் அரசுக்கு மத்திய அரசு வழங்கும். இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணமடைந்ததாக அறிவிக்கப்படும் சில மணி நேரங்களுக்கு முன்பே சென்னை வந்து சேர்ந்த வெங்கையா நாயுடு, அவர் உடல் அடக்கம் நடைபெறும்வரை அனைத்து நடவடிக்கைகளையும் உடனிருந்து கண்காணித்தார். ஜெயலலிதாவின் உடல் அடக்கம் நடைபெற்ற பிறகுதான் அவர் டெல்லி திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.