Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 24, 2016

கறுப்பு பணம்" இளைஞர்கள் படிக்க வேண்டிய ஒரு செய்தி:



கறுப்பு பணம்" இளைஞர்கள் படிக்க வேண்டிய ஒரு செய்தி:

கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமானால் இந்தியாவிற்கு வரும் அந்நிய முதலீடுகளுக்கு தடை விதிக்க வேண்டும். என்னடா இவன் இப்படி சொல்கிறான், அந்நிய முதலீடு தான் நமது நாட்டின் பொருளாதரத்தை உயர்த்துகிறது என்று நீங்கள் நினைக்கலாம். இந்தியாவில் அந்நிய முதலீடாக வருகிற அத்தனையுமே கறுப்பு பணம் தான். பெருமுதலாளிகள் அனைவரும் தங்களது பணத்தை வீட்டில் வைப்பதில்லை. வெளிநாடு வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தால், அந்த பணம் எந்த லாபத்தையும் தரப்போவதில்லை.

கறுப்பு பணம் "பார்ட்டிசிபேட்டரி நோட்" மூலம் அந்நிய முதலீடுகளாக நமது நாட்டிற்குள் நுழைகின்றன. இந்த பார்ட்டிசிபேட்டரி நோட் மூலம் எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். இதற்கு வரி கிடையாது. இவர்களின் விபரமும் வருமான வரித்துறையினருக்கு தெரியாது. தெரியப்படுத்தவும் கூடாது என்பதே நமது நாட்டின் சட்டம்.

சரி, இத்தகைய பணங்கள் எப்படி வெளிநாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் இங்கு கொண்டு வரப்படுகிறது என்கிற சந்தேகம் வரலாம். உலகம் முழுவதிலும் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளும், கோடீசுவரர்களும் வரி ஏய்ப்பு, கள்ளக்கணக்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்கள் மூலம் தாங்கள் ஈட்டிய பணத்தை, பினாமி பெயர்களில் முதலீடு செய்வதற்குத் தெரிவு செய்யும் சொர்க்கத் தீவுகள் அமெரிக்கா, லக்சம்பர்க், சுவிஸ், கே மென் தீவுகள், லண்டன் மற்றும் மொரிசியஸ்.

இத்தகைய நாடுகளில் உள்ள வங்கிகளில் பணத்தை முதலீடு செய்தால் வரி கிடையாது. இங்கு ஒரு நிறுவனத்தை தொடங்குவது போல காட்டி, அந்த நிறுவனம் இந்தியாவில் அந்நிய முதலீடு செய்வதை போல பங்கு சந்தையிலும், வேறு வழிகளிலும் முதலீடு செய்து, கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி வருகின்றனர். இது காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இரண்டு கட்சிகளுக்கும் தெரியும். இதில் இவர்களுக்கும் பங்கு இருக்கிறது.

நமது நாட்டில் சுவிஸ் போன்ற வெளிநாடு வங்கிகளில் account வைத்துக்கொள்வது சட்ட விரோதம் கிடையாது. கறுப்பு பணம் என்பது வெளிநாடுகளில் இருப்பதை போல ஒரு பிம்பம் காட்டப்படுகிறது. ஆனால் அவை அனைத்துமே அரசாங்கத்தின் உதவியுடன் வெள்ளையாக மாற்றப்பட்டு வருகிறது.

நமது நாட்டில் கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமானால், வெளிநாடுகளில் குறிப்பாக மேற்சொன்ன நாடுகளில் வங்கி கணக்கு வைத்திருப்பது சட்ட விரோதம் என சட்டம் இயற்ற வேண்டும். பார்ட்டிசிபேட்டரி நோட் முறையை ரத்து செய்ய வேண்டும். அந்நிய முதலீடுகளுக்கு கொடுக்கப்பட்ட தாராள அணுகுமுறையை குறைக்க வேண்டும்.

நண்பர்களே, மொரிசியஸ் என்பது மிக மிக சிறிய தீவு. நமது நாட்டில் வரக்கூடிய அந்நிய முதலீடுகளில் மூன்றில் ஒரு பங்கு இந்த தீவில் இருந்து தான் வருகிறது. இந்த அளவிற்கு செல்வம் நிறைந்த ஊர் அல்ல அது. நம்மவர்கள் அங்கு பணத்தை முதலீடு செய்து பின்பு அங்கிருந்து இந்தியாவில் முதலீடு செய்கிறார்கள். இதனை புரியாமல், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்றவுடன் கறுப்பு பணம் ஒழிந்துவிடும் என்று நாம் நம்பிகொண்டிருக்கிறோம்.

அரசாங்கம் மனது வைத்தால் இதையெல்லாம் தடுக்க முடியும். ஆனால் யாரும் செய்யமாட்டார்கள். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க இரண்டுமே இந்த நாட்டை சூறையாடி கொண்டிருக்கின்றன. இவர்கள் ஒருவரை ஒருவர் காட்டிகொடுக்க மாட்டார்கள்.

இது ஒரு சிறிய தகவல் தான். இளைஞர்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தியாவின் பொருளாதாரம் எங்கிருந்து வருகிறது என்பதை பற்றி படிக்க வேண்டும். குறிப்பாக பாட்டிசிபெட்டரி நோட் என்றால் என்ன என்பதை பற்றியெல்லாம் படிக்க வேண்டும். வெறும் மீடியா சொல்வதையும், அரசியல் வாதிகள் சொல்வதை மட்டும் நம்பக்கூடாது.

நாம் நம்பும் வரை தான் அரசியல்வாதிகளும், மீடியாக்களும் ஏமாற்றுவார்கள். நாம் விழித்துக்கொண்டால் இவர்களால் மாயாஜாலம் செய்யமுடியாது. விழித்துக் கொள்வோம். பிறரையும் விழிக்கச் செய்வோம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.