December 20, 2016
தமிழ் இலக்கியங்களில் இல்லாத அறிவியலா ?? படித்து பார்த்து பகிருங்கள் !!
சமஸ்கிருத இலக்கியங்களில்: யாகத்திலிருந்து வரும் புகை மேகமாகி மழை பெய்கிறது.
தமிழ் நூல்கள்: கடல் நீர் ஆவியாவதால் மேகம் உருவாகி மழை பொழிகிறது.
திருப்பாவை-4
ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய். "
மழைப்பொழிவு பற்றிய அறிவியல் உண்மைகளை பண்டைத்தமிழர்கள் மிக முன்பே அறிந்து கொண்டுள்ளனர் கடலில் இருந்து நீரை முகந்து மேகமானது மழையாக கொண்டு வந்து நிலத்திற்கு தருகின்றது என்ற அறிவியல் கோட்பாடு அன்றே நிலைப்பட்டுவிட்டது.
பட்டினப்பாலையில்"வான்முகந்த நீர் மலைப்பொழியும் மலைப்பொழிந்த நீர் கடற்பரப்பும் மாரிபெய்யும் பருவம் போல"{பட்டினப்பாலை:126}என்று குறிப்பிட்டுள்ளது,அதாவது வானம் நீரை மேகமாக முகந்து மலையின்மீது பொழிந்து மலையில் பொழிந்த நீர் கடலில் சென்று சேர்கிறது இந்த நீர் சுழற்சியை{hydrogical cycle}இன்றைய அறிவியல் உலகம் விளக்கிறது. இதுபோல "மறந்து கடல் முகந்த கமஞ்சூழ் மாமழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல் {நற்றிணை-99}என்றபாடல் வரிகள் கடல்நீர் ஆவியாகி மேகமாகி பின்னர் மழை பொழியும் அறிவியலை கூறுகிறது. அகநானூறு "மாக்கடல் முகந்து மாதிற்று இருளி பெயல் பெய்து கழிந்த பூநாறு வைகறை" என்று கூறுகிறது இதுவும் கடலில் இருந்து நீர் மேகமாகி மழை பொழியும் அறிவியலை கூறுகிறது,,,
இவ்வளவு அறிவியலோடு வாழ்ந்த எம் மூதையர்களை காட்டுமிராண்டிகள் என்று தமிழ்மொழி நீச்சபாஷை என்றும் தமிழில் அறிவியல் இல்லை என்றும் சொல்லும் அறிவிலிகளை என்ன சொல்லுவது.?
"
நன்றி logan k nathan.
தமிழ் இலக்கியங்களில் இல்லாத அறிவியலா ?? படித்து பார்த்து பகிருங்கள் !!
Reviewed by மறத்தமிழன்
on
December 20, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.