December 22, 2016
லஞ்சம் தர மறுத்ததால் பிறந்த குழந்தையின் முகத்தை ஹூட்டரில் காட்டி பொசுக்கிய கொடூர நர்ஸ் !
லஞ்சம் தர மறுத்ததால் பிறந்த குழந்தையை ஹீட்டர் அருகே காட்டி கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் ஜெய்ப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் துணை செவிலியராக பணிபுரிபவர் நீது குர்ஜார். இந்நிலையில் மாயா என்ற பெண் பிரசவத்திற்காக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த திங்கட்கிழமை பெண்குழந்தை பிறந்தது. இதனிடையே நீது குர்ஜார் 300 ரூபாயை லஞ்சமாக மாயா குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார். ஆனால் மாயா குடும்பத்தினர் லஞ்சம் கொடுக்க முன்வரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த நீது பிறந்த குழுந்தை என்றும் பாராமல் அக்குழந்தையை எடுத்து சென்று ஹீட்டர் அருகே தூக்கிப்பிடித்தார். நீதுவின் இந்த கொடூர் செயலால் அச்சமடைந்த குழந்தையின் பாட்டி நீதுவிற்கு 300 ரூபாயும், அங்கிருந்த மற்றொரு செவிலியருக்கு 200 ரூபாயும் லஞ்சமாகக் கொடுத்தார். பின்னர் நீது குழுந்தையை திருப்பி கொடுத்துள்ளார்.
ஆனால் ஹீட்டர் அருகே தூக்கிப் பிடித்ததால் குழந்தையின் முகத்தில் காயங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த குழந்தை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குழந்தையின் தந்தை லால்சந்த் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரை அடுத்து நீதுவுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லஞ்சம் தர மறுத்ததால் பிறந்த குழந்தையின் முகத்தை ஹூட்டரில் காட்டி பொசுக்கிய கொடூர நர்ஸ் !
Reviewed by மறத்தமிழன்
on
December 22, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 22, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.