December 18, 2016
மாணவர்களை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்த பள்ளி நிர்வாகம்
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே மாணவர்களை கொண்டு கழிப்பறையை சுத்தம் செய்த பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குளம் அருகே உள்ள ஆண்டிப்பட்டி கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 100 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு அரசு சார்பில் இரண்டு ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகம் சார்பில் இரண்டு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளியில் உள்ள கழிப்பறையை மாணவர்களை கொண்டு மாதம் மூன்று முறை பள்ளி நிர்வாகம் சுத்தம் செய்து வருவதாக குற்றச்சாடு எழுந்துள்ளது.
இதனால் அப்பள்ளியில் உள்ள ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகி ரோஸ்லினிடம் கேட்டதற்கு, பதில் கூற மறுத்துவிட்டார். இத்தகைய பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவர்களை வைத்து கழிப்பறையை சுத்தம் செய்த பள்ளி நிர்வாகம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 18, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 18, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.