December 14, 2016
கலைஞரை பிரிந்தார் ராசாத்தி அம்மாள்..! ஒரு கண்ணீர் கதை..! ஐயோ என்னாச்சு..!?
முத்தமிழ் அறிஞர்..மூதறிஞர்..டாக்டர் கலைஞர் எனும் சிங்கம்…! அறுபது ஆண்டு கால அரசியல் ஞானி.
கலைஞர் இல்லாத அரசியல் சம்பவங்களே இல்லை. எதிலும் அவர் பெயர் இருக்கும் ..இருந்தது.
இன்னும் நூறாண்டுகள் கடந்தும் தமிழக அரசியல் வரலாற்றில் கலைஞர் எனும் முத்திரை இருந்து கொண்டே இருக்கும்.
ஆனால், சமீப காலங்களில் வயதும், மரபு ரீதியான நோயின் தாக்கமும் அவரை செயல் பட முடியாத சூழலில் வைத்திருகிறது.
அப்படி இருந்தும் கூட முரசொலிக்கு இன்று வரை கடிதங்கள் தீட்டிக் கொண்டே இருக்கிறது அந்த உதய சூரியன்.
ஆனால், சமீபகாலங்களில் அவருக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக ஒரே வீட்டில் முடங்கி விட்டார்.
அரசியலில் படு பிசியாக இருந்த காலகட்டத்தில் கூட ஆலிவர் ரோட்டில் உள்ள கனிமொழியின் தாயாரும் தனது துணைவி ராசாத்தியம்மாள் வீட்டிற்கு போகாமல் இருந்ததே இல்லை.
மதிய உணவுக்கு அங்கு போய் விடுவார்.மாலையில்கோட்டையில் இருந்து ராசாத்தியம்மாள் வீட்டில் போய் ஓய்வெடுப்பார்.
இப்போது உடல் நலம் சரி இல்லாமல் ஓய்வெடுக்கும் கலைஞர் ராசாத்தியம்மாள் வீட்டிற்கு போக வழியே இல்லை.
மூன்று மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இது ராசாத்தியம்மாளுக்கு கடும் மனஉளைச்சலையும்..வேதனையையும் கொடுத்து விட்டது.
கலைஞர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பும்போது தனது வீட்டிற்கு அழைத்துப் போய்விட கடும் முயற்சி எடுத்தார்.அதுவும் நடக்க வில்லை..!
கோபாலபுரம் போய் பார்த்து வந்தார் ராசாத்தியம்மாள். அங்கும் கூட தனது மகளின் எதிர்காலம் குறித்து பேச முடியவில்லை என்கிறார்கள்.
அப்படி தனியே பேசினாலும் அத்தனை விஷயங்களும் தளபதியின் காதுகளுக்கு போய்விடுகிறது…!
மூத்த குடும்பம் கடும் தடைகளை விதித்து வருகிறது. நோயின் தாக்கம்..ஒவ்வாமை..இன்பெக்சன் காரணம் காட்டி தடை போட்டு விடுகிறார்கள்.
இதனால் ராசாத்தியம்மாள் கோபாலபுரம் போவதை நிறுத்திக் கொண்டார். இனி எப்படியும் கலைஞரை அங்கு போக அனுமதிக்கவே மாட்டார்கள்.
பெங்களூருக்கு கூட்டிப் போய்விடவும் மூத்தமகள் செல்வி அம்மையார் முயற்சிக்க, இனி பிரிவதைத் தவிர வேறு வழியே இல்லை எனும் முடிவிற்கு வந்து விட்டார் ராசாத்தியம்மாள் என்கிறார்கள்…!
ஆலிவர் ரோடு வீடு கண்ணீரோடு இருக்கிறது என்கிறது பத்திரிகை செய்திகள்..பாவம் தான்…!
கலைஞரை பிரிந்தார் ராசாத்தி அம்மாள்..! ஒரு கண்ணீர் கதை..! ஐயோ என்னாச்சு..!?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 14, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.