சென்னை: சென்னையை நாசமாக்கி வரும் நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான வர்தா புயல் சென்னை அருகே கரையை கடக்கத் துவங்கியது. நாடா புயலை போன்று இல்லாமல் வர்தா சென்னையை மிரட்டி வருகிறது.
சென்னையில் கனமழை பெய்து வருவதுடன், பேய்க்காற்று வீசி வருகிறது. வீடுகளின் மேல் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் பறந்து விழுந்துள்ளன. பல்வேறு இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்துள்ளன.
சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. புயலின் மையப் பகுதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்குள் கரையை கடக்கும்.
அப்போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் சென்னையை நாசமாக்கி வருகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்படுவோர் 044 - 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.