Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 19, 2016

டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் மோடியை சந்திக்கிறார் என்ன நடக்குமோ?


வார்தா புயலால் ஏற்பட்ட சேத மதிப்பு விவரம் அடங்கிய அறிக்கையை பிரதமர் மோடியிடம் கொடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்துவதற்காக டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் இன்று மாலை பிரதமரை சந்திக்கிறார்.

வார்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. மின் கம்பங்கள், மின்சார டிரான்ஸ்பார்மர்கள் போன்றவை சாய்ந்ததால் நகரமே இருளில் மூழ்கியது.

புயலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வீடுகளில் மேற்கூரைகள் பறந்தன. மரங்களும் வேரோடு சாய்ந்தன. தென்னை, மா, வாழை, நெற்பயிர்களும் சேதமடைந்தன. தொலைத்தொடர்பு சேவையும் முற்றிலுமாக முடங்கியது.

போர்க்கால அடிப்படை யில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சாலைகளில் விழுந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்களும், தீயணைப்பு படையினரும் வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர்.

மின்கம்பங்கள், டிரான்ஸ் பார்மர்களை சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான இடங்களுக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டு விட்டது.

முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்டு துரிதப்படுத்தினர். மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட துறைகளுக்கு அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.500 கோடியை ஒதுக்கி முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். மேலும் சேத மதிப்புகளை பார்வையிட மத்திய குழுவும் இன்று வருகிறது.

இந்த நிலையில் வார்தா புயலால் ஏற்பட்ட சேத மதிப்பை கணக்கிட்டு தமிழக அரசின் கீழ் செயல்படும் துறைகள் வாரியாக அறிக்கை பெறப்பட்டு விட்டது.

இந்த அறிக்கையை பிரதமர் மோடியிடம் கொடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்துவதற்காக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிகாரிகள் இன்று டெல்லி சென்றனர்.

இன்று மாலை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். புயலால் ஏற்பட்ட சேதமதிப்பு விவரம் அடங்கிய அறிக்கையை அவரிடம் கொடுத்து நிவாரணம் வழங்க வலியுறுத்துகிறார்.

பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். பாராளுமன்ற வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடிதமும் கொடுக்கிறார்.

பின்னர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவே சென்னை திரும்புகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.