December 21, 2016
சாகும் வரை தளபதி நிழல் போதும்..! சசி அரசியல் பசி அரசியல்..! மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத்..!?
நாஞ்சில் சம்பத் அரசியலை விட்டே வெளியேறப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவிய நிலையில், அவர் திமுகவில் இணையப்போவதாக டி.வி ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அவரது தோழி சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது.
அதிமுக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் சசிகலாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
இதனால், அரசியலில் இருந்து நாஞ்சில் சம்பத் ஓய்வு பெறப்போவதாகவும் ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால், சம்பத் நண்பர்களோ.. அவர் அரசியலில் இருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை.
அதே சமயம் திராவிடப் பாரம்பரியத்தில் ஊறியவர் நண்பர் சம்பத். அண்ணாவையும், கலைஞரையும், அம்மாவையும் தலைவராக ஏற்றுக் கொண்ட அவர் சசிகலாவை தலைவியாக ஏற்றுக் கொள்ள மாட்டார்.
எனவே, தளபதியின் நிழலில் ஒதுங்கப் போகிறேன். சாகும் வரை திமுக போதும் என்று கண் கலங்க கூறினார் என்கிறார்கள்.
மேலும், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் திமுகவில் இணைவது குறித்து பேசியதாகவும், அதற்காக தேதி கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது ஆதரவாளர்கள் நான்கு லட்சம் பேருடன் தளபதி முன்னிலையில் விரைவில் திமுகவில் ஐக்கியமாவார் என்கிறார்கள்..!
சம்பத் இனி அதிமுகவை ஒரு பிடி பிடிப்பார்
சாகும் வரை தளபதி நிழல் போதும்..! சசி அரசியல் பசி அரசியல்..! மருத்துவமனையில் நாஞ்சில் சம்பத்..!?
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 21, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.