December 25, 2016
ஓபிஎஸ்க்கு ஆதரவாயிரு…! இல்ல டெல்லியை விட்டு ஓடு…!! தம்பிதுரைக்கு செக்…??
தமிழக அரசை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிதான் இயக்கி வருகிறது. இந்த செயல் அதிமுக தொண்டா்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சசிகலாவின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்க மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா பெரும் முயற்சி எடுத்து வருகிறது.ஜெயலலிதா உடல் நலக்குறைவாக செப்டம்பா் 22ம்தேதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் சோ்க்கப்பட்டாா்.
அன்று முதல் இறந்ததாக கூறப்பட்ட நாள்வரை என்ன நடந்தது. எப்படி நடந்தது, இதற்கெல்லாம் யார் காரணம் என்று மத்திய உளவுத்துறையின் மூலம் ரகசிய தகவல்களையும், ஆதாரங்களையும் திரட்டி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால்தான் சசிகலா விரும்பிய நபா் முதல்வராக முடியவில்லை. மத்திய அரசு விரும்பிய நபரே முதல்வராக வர முடிந்தது.இதற்கு அடுத்தாற் போல் அதிமுகவில் முக்கிய பிரமுகா்களுக்கு பினாமியாக இருந்த, சேகா் ரெட்டியை வளைத்தது மத்திய அரசு.அதன் காரணமாக தலைமை செயலாளா் ராமமோகன ராவ் வருமானவரி துறையில் சிக்கினார்.
அவரை தொடா்நது பல ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனை தடுக்க துணை சபாநாயகா் தம்பித்துரை சசிகலாவின் சார்பாக முயன்றுள்ளார். ஆனால் மத்திய அரசிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.
துணை சபாநாயகா் தம்பிதுரை மத்திய அரசு விருப்பத்திற்கு மாறாக செயல்பட வாய்ப்பு உள்ளதாக பேசப்பட்டு வருகிறது. இதனை புரிந்து கொண்ட மத்திய அரசு, அவரை அருகில் வைத்திருப்பது ஆபத்து என்று எண்ணுகிறதாம்.
அதனால், துணை சபாநயாகா் பதவியை ராஜினாமா செய்ய சொல்லி நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு மூலமாக வற்புறுத்தப்படுவதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் சசிகலாவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ஓபிஎஸ்க்கு ஆதரவாயிரு…! இல்ல டெல்லியை விட்டு ஓடு…!! தம்பிதுரைக்கு செக்…??
Reviewed by மறத்தமிழன்
on
December 25, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
December 25, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.