துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரும் , பிரபல நடிகர், அரசியல் விமர்சகருமான “சோ” ராமசாமி திடீர் மரணம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டு இருந்தார்.
அரசியலில் முழுமையாக தன்னை இணைத்துக்கொள்ளாத ஒரு அரசியல் சாணக்கியர் சோ. நகைச்சுவை பாணியில் அரசியல் விமர்சனங்களை செய்து புரட்சி செய்த மூத்த பத்திரிக்கையாளர் சோ. பல ஆட்சி/கூட்டணி மாற்றங்களுக்கு காரணக்கர்த்தா.
இவரின் ‘அரசியல் நையாண்டி’ எழுத்துக்கள் இவருக்கு ‘பத்திரிக்கை உலகில்’ தனி இடத்தை தந்தது. நடிகர் ‘சோ’ க்கு 82 வயது ஆகிறது. இவரின் இழப்பு திரையுலகத்திலும், அரசியல் வட்டத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நடிகர் அஜித், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக 12 மணிநேரம் பயணம் செய்து பல்கேரியாவில் இருந்து இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
சோ ரஜினியின் நெருங்கிய நண்பர், இந்த துக்க செய்தியை அறிந்த ரஜினி முதல் ஆளாக வந்து தன் அஞ்சலியை செலுத்தினார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.