Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 26, 2016

ஜெ. மரணத்தில் மர்மம்: சசிகலாவை எதிர்க்கும் ‘சோ’வின் துக்ளக்’!


ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த முழுவிவரமும் வெளிவர வேண்டும் என்றும், அதிமுகவின் தலைமைப் பதவிக்கு சசிகலா வரக்கூடாது என்றும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது, சோ நிறுவிய துக்ளக் பத்திரிகை.

துக்ளக் பத்திரிகையின் தலையங்கத்தில் ‘ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா குடும்பம் சதி செய்தது அம்பலமானதால்தான் அவர் போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது குறித்து சோவிடம் ஜெயலலிதாவே கூறியிருக்கிறார்’ என்கிறது துக்ளக்.

‘அதிமுகவில் ஜெயலலிதா தவிர மற்ற எல்லோருமே சைபர்கள். அந்த சைபர்கள் எல்லாம் சேர்ந்து சசிகலா எனும் சைபரை தேர்ந்தெடுத்தால் அவர் சைபர் இல்லை என்று ஆகிவிடுமா? ஜெயலலிதா பாணியில் சசிகலா தன்னை சின்னம்மா என்று அழைத்தால் அது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டது போலத்தான்’ என்கிறது துக்ளக்.

சசிகலாவிடம் அதிமுக நிர்வாகிகள் தலைமையேற்க கோரிக்கை வைப்பதும், பத்திரிகை முதலாளிகள் அவரை வரிசையாக சந்திப்பதும் அப்பட்டமான நாடகம் என்கிறது துக்ளக்.

“துக்ளக் கருத்து முக்கியமானது!”

துக்ளக் இதழ் ஜெயலலிதாவின் ஒரே ஆசான் ஆன ‘சோ’ வுடையது. அதுமட்டுமல்லாமல், இந்தியப் பேரரசை ஆளும் தில்லி தலைமையின் முக்கியமான ஆலோசகரும், நாக்பூர் தலைமையகத்தின் முக்கிய பிரதிநிதியுமான ஆடிட்டர் குருமூர்த்தியை ஆசிரியராகக் கொண்டு துக்ளக் இதழ் வெளிவருகிறது என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியது ஆகும்.
துக்ளக் இதழின் கடுமையான சசிகலா எதிர்ப்பு தமிழக அரசியலின் புதிய பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.