December 9, 2016
பிரபாகரனை அடியோடு அழிக்க சொன்னவர்தான் ”சோ”!
தமிழ்நாட்டு மக்களுக்கு சோ வின் மறைவு அதிர்ச்சியினை ஏற்படுத்தினாலும் ஈழ மக்கள் பார்வையில் சோ வின் நிலை மிக மோசமாகவே பார்க்கப்பட்டுள்ளார்.
சோ பார்ப்பணராக பிறந்தார். பார்ப்பணியத்திற்காக வாழ்ந்தார். பார்ப்பணராகவே மறைந்தார். அதனால்தான் பார்ப்பணியவாதிகள் அவரை போற்றுகின்றனர்.
தமிழ் மொழியை பழித்துக்கொண்டு தமிழில் பத்திரிகை எழுதி வெளியிட்டு சம்பாதித்தார். தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் இனத்திற்கு எதிராக செயற்பட்டார்.
இவரைப் பொறுத்தவரையில் முஸ்லிம்கள் என்றால் அவர்கள் எல்லாம் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் என்பார். ஈழத் தமிழர் என்றால் அவர்கள் எல்லாம் புலிப் பயங்கரவாதிகள் என்பார்.
இவர் ஒரு வழக்கறிஞர். ஆனாலும் அப்பாவி மக்களை பொலிசார் போலி மோதலில் படுகொலை செய்வதையும் பொலிசார் சட்டத்தை தம் கையில் எடுத்து தண்டனை வழங்குவதையும் சரி என்று நியாயப்படுத்துவார்.
ஆனால் கொலை மற்றும் பாலியல் குற்றங்களுக்காக காஞ்சி சங்கராச்சாரிகளை கைது செய்தால் உடனே பொங்கி எழுந்து கூச்சல் போடுவார். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தக்கூடாது என்று கூச்சமின்றி எழுதுவார்.
இவர் ஒரு எம்.எல் ஏ வோ அல்லது எம்.பி யோ இல்லை. எந்தவொரு அரசியல் கட்சியையும் சேர்நதவரும் இல்லை. எந்த பதவியையும் வகித்தவர் அல்ல. நாட்டுக்காக உழைத்த தியாகியும் இல்லை.
ஆனால் இவர் சிறிது சுகயீனம் என்று மருத்துவ மனையில் படுத்தால் உடனே பிரதமர் முதல் ஜெயா அம்மையார் கலைஞர் என பல தலைவர்கள் ஓடிச் சென்று பார்வையிடுகின்றனர்.
1980ல் இலங்கை வந்து ஜே.ஆர் ஜெயவர்த்தனாவை சந்தித்து பரிசு வாங்கிச் சென்றார். அன்றுமுதல் அவர் ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகவே எழுதியும் செயற்பட்டும் வந்தார்.
மரணப் படுக்கையில் இருந்த நிலையில் கூட இவர் தனது ஈழத் தமிழருக்கான எதிர்ப்பு உணர்வைக் கைவிட வில்லை. 30.11.2016 துக்ளக் இதழில்கூட தானே ஒரு கேள்வியை கேட்டு அதற்கு பதிலாக நஞ்சைக்; கக்கியுள்ளார்.
கேள்வி- இலங்கையில் பிரபாகரன் படை என ஒன்று புதிதாக முளைத்துள்ளதே?
சோ பதில் – இலங்கை அரசு இந்த அமைப்பின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பத்தில் இப்படி தோன்றுவதுதான் பிறகு பெரும் பிரச்சனையாக முடிகிறது.
மாணவர்கள அப்பாவிகள் என்றும் அவர்களை சுட்டது தவறு என்றும் இலங்கை அரசே கூறியுள்ளது. ஆனால் சோ வின் பார்ப்பணிய கண்களுக்கு அவர்கள் புதிதாக தோன்றும் பிரபாகரன் படையாக தெரிகிறது.
சோ வின் தமிழின விரோத செயற்பாடுகளால் 1986ல் மதுரையில் அவருக்கு அசிட் முட்டை வீசப்பட்டது. ஆனால் அதில் அவர் தப்பிவிட்டார். அதனையடுத்து அவருக்கு பல வருடங்களாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பிரபாகரனை அடியோடு அழிக்க சொன்னவர்தான் ”சோ”!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 09, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 09, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.