Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 31, 2016

விவசாயம் பொய்த்ததால் மன உளைச்சலில் விவசாயி தற்கொலை!



தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயம் பொய்த்ததால் மன உளைச்சலில் விவசாயி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விளாத்திகுளம் அருகேயுள்ள கம்பத்துபட்டியை சேர்ந்த விவசாயி பவுன்ராஜ் தன்னுடைய 15 ஏக்கர் நிலத்தில் மக்காசோளம், மற்றும் மிளகாய் பயிர் செய்திருந்தார்.

பருவமழை பொய்த்ததால் விவசாயத்திற்கு போதிய நீரின்றி பயிர்கள் கருகியது. இதனால், மன உளைச்சல் அடைந்த விவசாயி பவுன்ராஜ் பயிர்களுக்கு தெளிக்க பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விவசாயியின் சடலத்தை மீட்ட உறவினர்கள் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.