Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 23, 2016

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்: சசிகலா புஷ்பா அதிரடி பேட்டி !


அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிட உள்ளதாக ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர், அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்ந்தெடுக்கக் கூடாது என்று ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் பொதுச் செயலாளர் பதவிக்கு தாம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது அதிமுகவினரிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கடந்த 5ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து அவரது தோழி சசிகலாவை அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும், அவர்தான் அடுத்த முதல்வராக பதவியேற்க வேண்டும் எனவும் சில அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில சசிகலா புஷ்பா அளித்துள்ள பேட்டியில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்து, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி நான் முடிவு செய்வேன். கட்சியின் அடிப்படை உறுப்பினர் என்ற அடிப்படையில் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட எனக்கு உரிமை உள்ளது.

அதிமுகவில் இருந்து இன்னும் என்னை நீக்கவில்லை. நான் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தால், என் மீது விசாரணை நடத்தி கடிதம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். தற்போது வரை மாநிலங்களவை ஆவணத்தில் நான் அதிமுக எம்.பி.யாகவே நீடிக்கிறேன்.

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு சசிகலா நடராஜன் வருவதை 75 சதவீத அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. மக்கள் முன் நாடகம் ஆட கட்சி தொண்டர்களை நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி வருகின்றனர். இவ்வாறு சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.