Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

போலீஸ் வாகன சோதனையிலிருந்து தப்பிக்க நினைத்த கல்லூரி மாணவன் பலி


சென்னை : மதுகுடித்து விட்டு வாகனத்தை ஓட்டி வரும் நபர்களை பிடிப்பதற்காக போலீஸார் நேற்று புரசைவாக்கம் பகுதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் எல் முகிலன் என்ற கல்லூரி மாணவன் மற்றும் அவரது நண்பரகள் இருவருடன் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். வண்டியை முகிலன் ஓட்டியுள்ளார். இந்நிலையில் புரசைவாக்கம், நம்மாழ்வார்பேட்டையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

போலீஸாரை பார்த்த முகிலன் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களிடமிருந்து தப்பிக்க வேகமாக வண்டியை திருப்பி சென்றுள்ளனர். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையில் வேகமாக சென்றதால் தடுமாறி கீழே விழுந்தனர். அதில் முகிலன் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். அவருடன் பைக்கில் சென்ற நண்பர்கள் உயிர் தப்பினர்.

கீழ்பாக்கம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் முகிலன் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர் என்பதும், இதன் காரணமாக போலீஸிடமிருந்து தப்பிக்க நினைத்த போது இந்த விபரீதம் நடந்ததாக தெரிகிறது என குறியுள்ளனர்.

முகிலனின் தந்தை லீலா கிருஷ்ணன் சலூன் கடையை நடத்தி வருகின்றார். முகிலன் ஏ எம் ஜெயின் கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து வந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.