December 15, 2016
சிட்டிசன் பட பாணியில் ஒரே இரவில் மாயமான கிராமம்!!.. அத்திபட்டியை போல் காணாமல் போன குல்தாரா!!..
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் குல்தாரா என்னும் கிராமம் 12ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் திடீரென ஒரே நாளில் காணாமல் போய் விட்டதாம்!.
இந்த குல்தாரா கிராமம் 85 குக்கிராமங்களை உள்ளடக்கியது என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், கூறுகின்றனர்.
இந்த கிராம மக்கள் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக செய்து வந்துள்ளனர். குல்தாரா கிராமத்தின் தலைவர் மகளை ஜெய்சல்மார் திவான் சிங் என்ற மன்னர் காதலித்ததாகவும் அதற்கு அந்த பெண்ணின் தந்தை மற்றும் ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த ஜெய்சல்மார் அந்த ஊர் மக்களை பயமுறுத்தி, அதிக வரி வசூல் செய்யப்போவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு உடன்படியாத அந்த கிராம மக்கள் தங்கள் தன்மானம், சுய கௌரவம் தான் முக்கியம் என முடிவெடுத்து இரவோடு இரவாக தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
மேலும், பேய் பயத்தால் மக்கள் குல்தாரா கிராமத்தை காலி செய்தார்கள் என்றும், இயற்கை சீற்றத்தால் குல்தாரா கிராமம் அழிந்திருக்கவும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
சிட்டிசன் பட பாணியில் ஒரே இரவில் மாயமான கிராமம்!!.. அத்திபட்டியை போல் காணாமல் போன குல்தாரா!!..
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 15, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
December 15, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.