Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 21, 2016

அம்மா இல்லாததினால் மத்திய அரசுவின் அடாவடி - அரசியல் காட்சிகள் கடும் குற்றசாட்டு


தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை ரைடு! யாருக்கான மிரட்டல் ?

தலைமை செயலகத்தில் மத்திய அரசின் வருமான வரித்துறை ரைடு நடத்தியது அங்குள்ள தலைமைச் செயலர் ராம மோகன ராவ் அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் சென்னையில் மத்திய அரசின் துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசியல் நடத்த பார்கின்றது மத்திய அரசு , இது தமிழகத்திற்கு ஏற்பட்ட அவமானம் , தமிழகம் ஆனாதையாக விடப்பட்டுள்ளது என மற்ற அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

அரசியல் வாதிகள் ஊழல் செய்து பணம் சம்பாதித்து பதுக்கி வைத்திருக்கின்றார்கள் என்பது நாடறிந்த உண்மை. ஒரு போஸ்டிங் க்கு இன்ன ரேட் என நிர்ணயிப்பது அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தானே இது எல்லோருக்கும் தெரிந்த விசயம் தானே அப்படி இருக்க ஏன் இந்த திடீர் சோதனை ரைடு , ரைடு நடத்தி தான் ஒருவரை பிடிக்க வேண்டுமா ? எல்லோரின் வண்டவாலமும் எல்லோருக்கும் தெரியும் தானே ? யாரை மிரட்டி என்ன சாதிக்க பார்க்கின்றது மத்திய அரசு என அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அம்மா இருந்திருந்தால் கை வைக்க விட்ருப்பார்களா , அம்மா இருந்திருந்தால் அவர்களால் உள்ளே நுழைய முடிந்திருக்குமா என அதிமுக தொண்டர்கள் ஆவேசப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.