Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 22, 2016

நான் பழைய பன்னீர் இல்லை..! யாரு சின்னம்மா..? ஒழுங்கா இருங்க…முதல்வர் கடும் எச்சரிக்கை.! நடுங்கும்



தான் யார் என்பதை ஒவ்வொரு நாளும் ஆணித்தரமாக நிருபிக்க ஆரம்பித்து விட்டார், முதல்வர் .
டெல்லிக்கு போய் வந்ததும் முதல் அதிரடியாக தலைமைச்செயலலாளர் ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகம், கோட்டை என ரெய்டு தொடர்கிறது.
அடுத்தடுத்த அட்டாக் தொடரும் என்கிறார்கள். இந்த நிலையில் நேற்று கடும் கோபத்தில் கோட்டைக்கு சிங்கமென வந்தார் முதல்வர்.
மொத்த அமைச்சர்களையும் தனது அறைக்கு வரவைத்தார். யாரையும் உட்காரவும் சொல்லவில்லை.
நின்றபடியே இருந்தார்கள். ஏறிட்டு பார்த்த முதல்வர், அம்மா விட்டுசென்ற கடமைகள் நிறைய இருக்கிறது.
அம்மாவின் கனவுகளும் நிறைய இருக்கிறது. நமக்கு அம்மா மட்டும் தான். சின்ன அம்மா, பெரிய  அம்மா, நடு அம்மா என்று யாரும் இல்லை.
யாருக்கும் காவடி தூக்க வேண்டாம். யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது. தப்பு பண்றவங்களுக்கு துணை போனீர்கள் என்றால் உங்களை கடவுளே வந்தாலும் காப்பாற்ற முடியாது.
போய் வேலைகளை கவனியுங்கள் என்று  கூறி அனுப்பினாராம்.  ஆடிப் போய்விட்டார்கள் அமைச்சர்கள். முகம் இருண்டு  போய் திரும்பினார்கள் என்கிறார்கள்.
 இது நம்ப பழைய பன்னீரா..? நடுங்கிப்போய் கிடக்கிறது கோட்டை வட்டாரம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.