Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 19, 2016

விபத்தை தவிர்க்க கார் கலரையும் பார்த்து வாங்கணுமுங்க!


கார் வாங்கும்போது ஏர்பேக் இருக்கிறதா,ஏபிஎஸ் பிரேக் இருக்கிறதா என்றுபாதுகாப்பு அம்சங்களை பார்த்து பார்த்து பலர்வாங்குகின்றனர். இவையெல்லாம் மிகமுக்கிய பாதுகாப்பு விஷயங்கள் என்பதில்
மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், விபத்தை தவிர்ப்பதற்குஅடிப்படையான ஆயுதம் என்ன தெரியுமா?வேறொன்றுமில்லை. காரின் வண்ணம்தான் அது. விபத்துக்கும், காரின் வண்ணத்திற்கும்என்ன சம்பந்தம் இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்பது நியாயம்தான். ஆனால், நிச்சயம் ஒரு
முக்கிய தொடர்பு இருக்கிறது.

ஆம், வெளிர் நிற கார்களைவிட அடர் வண்ணகார்கள் விபத்தில் சிக்கும் அபாயம்அதிகமிருக்கிறது. இதற்கு மிக முக்கியகாரணம், தூரத்திலிருந்து வரும் வாகனஓட்டிகளுக்கு அடர் வண்ண கார்கள் எளிதில்
புலப்படாததுதான் காரணம்.குறிப்பாக, இரவு நேரங்களில் ஹெட்லைட்
ஒளியில் அடர் வண்ண கார்களைவிட வெள்ளைவண்ணக் கார்கள் வாகன ஓட்டிகளுக்கு தெளிவாக தெரியும். இரவு நேரங்களில் கருப்பு, நீலம்,சாம்பல் வண்ண கார்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு
தெளிவாக தெரிவதில்லை என்பது பல ஆய்வுகள் மூலமாக
நிரூபணமாகியிருக்கிறது.

இன்ஸ்யூரன்ஸ் இழப்பீடு தொடர்பான ஆய்வுகளில் வெள்ளை, மஞ்சள் போன்ற வெளிர் நிற கார்களைவிட கருப்பு, நீலம், சாம்பல்
உள்ளிட்ட வண்ணக் கார்கள் அதிகம் சிக்கியிருப்பதாக தெரிவிக்கின்றன.
ஆஸ்திரேலியாவிலுள்ள விக்டோரியா மாகாணத்தின் கார் விபத்து புள்ளிவிபரங்களை எடுத்து அந்நாட்டை சேர்ந்த மோனாஷ்
பல்கலைகழகத்தின் விபத்து ஆராய்ச்சி மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அப்போது, வெள்ளை நிற கார்களுடன், இதர வண்ணங்களை ஒப்பிட்டு ஆய்வு செய்தது.

அப்போது, கருப்பு, நீலம், சாம்பல், பச்சை, சிவப்பு மற்றும் சில்வர் ஆகிய வண்ண கார்கள் வெள்ளை வண்ணக் கார்களைவிட அதிகம் விபத்தில் சிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பது தெரிய வந்தது. அதாவது, சிறந்தது வெள்ளை நிறம் மட்டுமே என்ற கருத்தை தெரிவித்தனர். வெள்ளையுடன் ஒப்பிடும்போது சில்வர் வண்ணக் கார்கள் 50
சதவீதம் அளவுக்கு விபத்தில் சிக்கும் வாய்ப்பை பெற்றிருப்பதாக மற்றொரு பொது கூற்றையும் உடைத்துள்ளனர்.
இரவு நேரங்களில் சாலை ஓரத்தில் வெள்ளை நிற கார்களை நிறுத்தியிருந்தாலும், பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு
தூரத்திலிருந்தே கார் நிற்பது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.