Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

December 29, 2016

ஜெயலலிதா உடல் தோண்டியெடுக்கப்படுமா? நீதிபதி கருத்தால் பரபரப்பு



சென்னை: ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சென்னை ஹைகோர்ட் நீதிபதி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஜோன்ஸ் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, ஹைகோர்ட் விடுமுறைக்கால பெஞ்ச் நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும், பார்த்திபன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதா, மருத்துவமனையில் இருந்தபோது படம், வீடியோ என எதுவுமே வெளியாகாததை சுட்டிக் காட்டி தனக்கும் சந்தேகம் இருப்பதாக நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ள நிலையில், நானே தொடர்ந்து வழக்கை விசாரித்திருந்தால், ஜெயலலிதா உடற்கூறு சோதனைக்கு உத்தரவிட்டிருப்பேன் என்ற கருத்தை அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஜனவரி 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று வேறு பெஞ்ச் வழக்கை விசாரிக்கும். அந்த பெஞ்ச் இதேபோல தீவிரகதியில் வழக்கை அணுகுமா என்பதை உறுதியாக கூற முடியாது. நீதிபதி வைத்தியநாதனை போன்ற மனநிலையில் அந்த பெஞ்ச் நீதிபதிகள் இருந்தால் ஜெயலலிதாவின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வாய்ப்புள்ளது.
சசிகலா சாவில் மர்மம் இருப்பதாக பலரும் சந்தேகம் தெரிவித்து வருகிறார்கள். ஊடகங்களிலும் செய்திகள் வருகின்றன. அதிமுக விசுவாசியாக இருந்த கராத்தே ஹுசைனியும், ஜெயலலிதா கொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். எனவே ஜெயலலிதா உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிட்டால், சமாதியிலிருந்து அவரது உடல் வெளியே எடுக்கப்பட வேண்டிய தேவை ஏற்படும்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.